இந்தியாவில் ரூ.672 பட்ஜெட் விலையில் போல்ட் இயர்போன் அறிமுகம்

இந்தியாவில் ரூ.672 பட்ஜெட் விலையில் போல்ட் இயர்போன் அறிமுகம்

டெல்லி: இந்தியாவில் ரூ.672 பட்ஜெட் விலையில் புதிய போல்ட் இயர்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆடியோ சாதனங்களை சுவாரஸ்யமான அம்சங்களுடன் வழங்குவதில் பிரபல நிறுவனமாக போல்ட் திகழ்கிறது. இந்நிறுவனம், இந்தியாவில் புதிய வயர்டு இயர்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. லூப் என்றழைக்கப்படும் இந்த புதிய மாடல் இயர்போன்களில் ஆங்கில்டு இயர் டிப்கள் மற்றும் பிரத்யேக இயர் லூப் ஃபாஸ்ட்னர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. கெவ்லரின் கேபிள்களை கொண்டிருக்கும் இந்த இயர்போனின் ஸ்டெபிலைசர் சீரான ஆடியோ தரத்தை வழங்கும்.

மேலும் இதில் உள்ள ஹை-ரிகிடிட்டி ஏ.எல். (High-rigidity AL) அலாய் ஹவுசிங்கள் தொடர் பயன்பாடுகளிலும் சிறப்பான அனுபவத்தை அளிக்கும். இதன் சிலிகான் டிரான்ஸ்லூசென்ட் இயர் ஃபாஸ்ட்னர் காதுகளில் கச்சிதமாக பொருந்திக் கொள்வதால் அடிக்கடி கீழே விழாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் உடற்பயிற்சி செய்யும்போது சிறப்பான ஆடியோ உத்வேகத்துடன் பயிற்சியில் மட்டும் கவனம் செலுத்த முடியும்.

மேலும், இதில் 3.5 எம்.எம் கனெக்டர் வழங்கப்பட்டு இருப்பதோடு உயர் ரக அழைப்புகள் மற்றும் வாய்ஸ் கமாண்ட் செய்ய ஏதுவாக இயர்போனில் பில்ட்-இன் கன்டெசர் மைக்ரோபோன் பொருத்தப்பட்டுள்ளது.

போல்ட் ஆடியோ லூப் சிறப்பம்சங்கள்:

உயர் ரக கேபிள் ஆடியோ தரத்தை குறையாமல் பார்த்துக் கொள்கிறது

– 3D சவுன்ட் சின்க்ரோனைஸ் செய்யப்பட்டு மேம்பட்ட ஆடிட்டரி அனுபவம் வழங்க 3D அகௌஸ்டிக்ஸ்

தங்க முலாம் பூசப்பட்ட சர்வதேச 3.5 எம்.எம். கனெக்டர்

பில்ட்-இன் மைக் மூலம் கன்டென்சர் மைக்ரோபோன் உயர் ரக அழைப்புகளுக்கு ஏதுவாக இருக்கும்

பில்ட்-இன் மைக்ரோ ஊஃபர்கள் இயர்போனின் ஆடியோ தரம் மற்றும் ஒலியை சிறப்பாக வழங்குகிறது

இந்தியாவில் இந்த போல்ட் ஆடியோ லூப் விலை ரூ.672 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிந்த்ரா ஆன்லைன் ஷாப்பிங் இணையதளத்தில் ரூ.530 சிறப்பு விலையில் வாங்க முடியும்.

போல்ட் இயர்போன் போல்ட் ஆடியோ லூப் இந்தியாவில் அறிமுகம் Boult Audio Boult Loupe
தொழில்நுட்பம்

Leave a comment

Comments