5-வது டெஸ்ட்: அலஸ்டைர் குக், ஜோ ரூட் சதம் - இந்தியாவிற்கு 464 ரன்கள் இலக்கு நிர்ணயம்

5-வது டெஸ்ட்: அலஸ்டைர் குக், ஜோ ரூட் சதம் - இந்தியாவிற்கு 464 ரன்கள் இலக்கு நிர்ணயம்

லண்டன்: 5-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 464 ரன்களை இந்தியாவுக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.

இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 331 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து இந்தியா முதல் இன்னிங்ஸில் 292 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதையடுத்து 2-வது இன்னிங்கை தொடங்கிய இங்கிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 2 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்திருந்தது. அலஸ்டைர் குக் 46 ரன்னுடனும், ஜோ ரூட் 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்றது. அலஸ்டைர் குக் தனது கடைசி இன்னிங்சில் சதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து ஜோ ரூட்டும் சதம் அடித்தார். இறுதியாக ஜோ ரூட் 125 ரன்னிலும், அலஸ்டைர் குக் 147 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 259 ரன்கள் குவித்தது.

அதன்பின் வந்த பேர்ஸ்டோவ் 18 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 37 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்கும்போது இங்கிலாந்து 7 விக்கெட் இழந்த நிலையில் 437 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இருந்தாலும் இங்கிலாந்து டிக்ளேர் செய்யவில்லை.

இறுதியாக 112.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து 463 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இந்தியாவிற்கு 464 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தியா இங்கிலாந்து 5-வது டெஸ்ட் போட்டி 464 ரன்கள் இலக்கு INDIA v ENGLAND 5th Test Match
விளையாட்டு

Leave a comment

Comments