5-வது டெஸ்ட் போட்டி: வெற்றி இலக்கை துரத்துவதில் இந்திய அணி திணறல் - 58 ரன்களுக்கு 3 விக்கெட்!

5-வது டெஸ்ட் போட்டி:  வெற்றி இலக்கை துரத்துவதில் இந்திய அணி திணறல் - 58 ரன்களுக்கு 3 விக்கெட்!

லண்டன்: 5-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்துள்ள 464 ரன்களை சேஸ் செய்வதில் இந்திய அணி தடுமாறி வருகிறது.

இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 331 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து இந்தியா முதல் இன்னிங்ஸில் 292 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதையடுத்து 2-வது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியாவிற்கு 464 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இதைத் தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் முக்கிய 3 விக்கெட்டுகள் மூன்றே ஓவர்களில் சரிந்தன. அதன்படி தவான் 1 ரன்னிலும், விராட் கோலி மற்றும் புஜாரா இருவரும் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகினர். லோகேஷ் ராகுல் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 46 ரன்களுடனும், ரஹானே 10 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர்.

4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாளான இன்று மிச்சமுள்ள இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினால் மட்டுமே இந்தியா வெற்றி பெறும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

இந்தியா இங்கிலாந்து 5-வது டெஸ்ட் போட்டி 464 ரன்கள் இலக்கு INDIA v ENGLAND 5th Test Match
விளையாட்டு

Leave a comment

Comments