7-வது நாளாக தொடரும் பஸ் ஸ்டிரைக்... முடிவுக்கு வருமா?

7-வது நாளாக தொடரும் பஸ் ஸ்டிரைக்... முடிவுக்கு வருமா?

சென்னை: ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டம் 7-வது நாளாக இன்றும் தொடர்கிறது.

ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து துறை தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த போது, போராட்டத்திற்கு விதித்த தடையை நீக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். மேலும், தொழிலாளர்களின் நிலுவைத்தொகையை படிப்படியாக வழங்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டனர்.

ஆனால், முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட பின்னர்தான் வேலை நிறுத்தம் செய்வதாக தொழிற்சங்கத்தின் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்றும் 7-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்கிறது.  இதனிடையே தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் தமிழக அரசும் - தொழிற்சங்கங்களுக்கும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு எட்டப்பட வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Transport workers strike tamilnadu bus போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தமிழ்நாடு
தமிழகம்

Leave a comment

Comments