கருட சேவை தரிசனம் களத்திர தோஷம் போக்கும் தரிசனம்

கருட சேவை தரிசனம் களத்திர தோஷம் போக்கும் தரிசனம்

கருட சேவை: கருட சேவை வழிபாடு மிகுந்த புண்ணியத்தை தருவதாகும்.அதனால் தான் திருப்பதி உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பிரம்மோற்சவ நாட்களில் கருட சேவையை தரிசனம் செய்யவே அதிக பக்தர்கள் வருகை தருகின்றனர். 

கருட சேவை என்பது வைணவத் தலங்களில் திருமால் கருட வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்வாகும். இந்நிகழ்வு வைணவக் கோயில்களின் பிரம்மோற்சவ விழாவில் நடைபெறுகிறது.திருமால் சீனிவாசனாக திருப்பதியில் இருந்த பொழுது, தான் வைகுண்டத்தில் இருந்ததைப் போல இங்கும் இருக்க ஆசை கொண்டார். அதனை அறிந்த கருடன், வைகுண்டத்தில் இருக்கும் ஏழு மலையையும் பெயர்த்து எடுத்து திருப்பதியில் சேர்த்தார். 

அங்கு திருமால் சீனிவாசனாக குடியிருக்கிறார். தான் ஆசைப்பட்டதை செய்த கருடனை தன்னுடைய வாகனமாக ஆக்கிக் கொண்டார்.இதனை நினைவு படுத்தும் விதமாக திருப்பதியில் கருட சேவை, பிரம்மோற்சவ திருவிழாவின் பொழுது நடத்தப்படுகிறது.மேலும் தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம்,  திருநாங்கூர்,கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய கோயில்களில் கருட சேவை  நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறுகிறது.

ஜோதிடத்தில் நாக தோஷம் மற்றும் களத்திர தோஷம் உடைய ஜாதகர்கள் கருட சேவையில் பெருமாளை தரிசிப்பதால், அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி சகலசெல்வங்களும் பெறுவார்கள் என்று பல்வேறு ஜோதிட கிரந்தங்களில் நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.கருட சேவையை தரிசிப்பதற்கு , மறைந்த முன்னோர்களான பித்ருக்களும் வருவார்கள் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கருட சேவையை தரிசிக்க சென்றால் பெருமாள் தரும் ஆசியுடன், நம் முன்னோர்களின் ஆசியையும் நாம் எளிதில் பெற முடியும்.மேலும் சுவாதி நட்சத்திர நாளில் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று கருடனை வழிபடுவதால் திருமணம் யோகம் மற்றும் வாகன யோகமும் உண்டாகும் என்பது மக்களின் நம்பிக்கை. அதனால் பக்தர்கள் திருமாலை மற்ற எல்லா விதமான வாகனங்களில் தரிசிப்பதைக் காட்டிலும் கருட சேவையில் தரிசிப்பதை பெரும் பாக்கியமாகக் கருதுவர்.

கருட சேவை திருப்பதி திருமலை பெருமாள் கருட புராணம் திருநாங்கூர் Garuda sevai Tirupati Tirumala Garuda puranam
ஆன்மிகம்

Leave a comment

Comments