8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தற்காலிக நிறுத்தம்: மத்திய அரசு

8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தற்காலிக நிறுத்தம்:  மத்திய அரசு

சென்னை: சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சென்னை-சேலம் இடையே புதிதாக 8 வழி பசுமை சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் வழியாக 277 கி.மீ. தூரம் அமைய இருக்கும் இந்த விரைவுச்சாலை திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.10,000 கோடி ஒதுக்கி இருக்கிறது. புதிய சாலை அமைக்கும் திட்டத்தால் விவசாய நிலங்கள், கிணறுகள், வீடுகள் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகளும், கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். எனினும், சாலை அமைப்பதற்கு தேவைப்படும் நிலத்தை கையகப்படுத்துவதற்காக, நில அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த திட்டத்தை எதிர்த்து பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. இவ் வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்தனர். இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற விசாரணையின்போது 8 வழிச்சாலைக்காக மரங்களை வெட்டப்படுவது எந்த சூழ்நிலையில் உள்ளது என்பது குறித்த அறிக்கையை தாக்கள் செய்ய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சரணில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கான வழித்தடத்தின் அகலத்தை மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதனால், இது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 8 வழிச்சாலை திட்டத்திற்கான நில எடுப்பு நடவடிக்கைகள் 2 வார காலத்திற்கு நிறுத்தி வைக்கப்படுவதாகவும் மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்கு எதிராக நில உரிமையாளர்கள் மற்றும் சமூக அமைப்புகள் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் மத்திய அரசு இந்த தகவலை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, மத்திய அரசின் இந்த அறிக்கையில் ஏராளமான முரண்பாடுகள் இருப்பதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் சுற்றுச்சூழல் ஆய்வறிக்கையை வருகிற  20-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Temporary suspension of land acquisition work for salem - chennai express way: Centre says in high court

எட்டு வழி சாலை நிலம் கையகப்படுத்த தடை சேலம் சென்னை உயர் நீதிமன்றம் எட்டு வழி சாலை சேலம் சென்னை பசுமைவழி சாலை சேலம் சென்னை நெடுஞ்சாலை Salem Chennai high court Salem Chennai expressway
தமிழகம்

Leave a comment

Comments