பெரம்பலூர் பியூட்டி பார்லர் தாக்குதல்: திடுக்கிடும் பின்னணி தகவல்கள்!

 பெரம்பலூர் பியூட்டி பார்லர் தாக்குதல்: திடுக்கிடும் பின்னணி தகவல்கள்!

பெரம்பலூர்: பியூட்டி பார்லரில் பெண் ஒருவரை திமுக முன்னாள் நிர்வாகி தாக்கியது தொடர்பான பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரம்பலூரில் பியூட்டி பார்லர் நடத்தி வருபவர் சத்யா. இவருக்கு பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலருடன் நட்பு ரீதியான பழக்கம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சத்யாவை அவரது பார்லருக்குள்ளே வைத்து திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார் மிக கொடூரமாக தாக்குவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அந்த காட்சியை தொலைக்காட்சியில் பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின், செல்வகுமாரை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவிப்பை வெளியிட்டார்.பெரம்பலூரில் ஸ்டீல் தொழிற்சாலை நடத்தி வருபவர் செல்வகுமார். திமுக பிரமுகரான இவர் கவுன்சிலராகவும் இருந்துள்ளார். இவருக்கும் சத்யாவிற்கும் நீண்ட காலமாகவே பணம் கொடுக்கல், வாங்கல் அளவிற்கு பழக்கம் இருந்ததாக தெரிகிறது. அதுமட்டுமின்றி செல்வகுமாருடன் பழகியது போலவே அவர் மற்றொரு திமுக பிரமுகரிடமும் நட்பு பாராட்டி வந்ததாகவும் ஆனால், கட்சிக்குள் செல்வகுமாருக்கும் அந்த நபருக்கும் இடையே புகைச்சல் இருந்து வந்ததால் சத்யாவுடன் செல்வகுமாருக்கு தகராறு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், செல்வகுமாருக்கும் மற்றொரு நபருக்கும் இடையே கட்சிக்குள் நடைபெற்று வந்த இந்த தகராறு குறித்த தகவல் ஸ்டாலினின் வாட்ஸப்பிற்கு அனுப்பப்பட்டது. இதையறிந்ததும், பெரம்பலூரில் செல்வாக்கான முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர், இருவரையும் கடுமையாக கடிந்து கொண்டதாக விபரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

இவ்வளவு நடந்தும், நட்பு கருதி செல்வகுமார் மீது போலீசில் சத்யா புகார் கொடுக்காமல் இருந்துள்ளார். இதை எதிர்பாராத செல்வகுமாரின் எதிர் தரப்பினர், இந்த வீடியோவை எப்படியோ வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டாலின் நடவடிக்கை பெரம்பலூர் பியூட்டி பார்லர் தாக்குதல் திமுக ஒழுங்கு நடவடிக்கை Stalin action perambalur beauty parlour issue
தமிழகம்

Leave a comment

Comments