இளம்பெண்ணை வன்கொடுமை செய்து தாக்கிய காவல் ஆய்வாளர் மகன்-அதிர்ச்சி வீடியோ

இளம்பெண்ணை வன்கொடுமை செய்து தாக்கிய காவல் ஆய்வாளர் மகன்-அதிர்ச்சி வீடியோ

டெல்லி: இளம்பெண்ணை வன்கொடுமை செய்து கொடூரமாக தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக டெல்லி காவல் துணை ஆய்வாளர் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த துணை காவல் ஆய்வாளர் ஒருவரது மகன் ரோஹித் டோமர். இவர் இளம்பெண் ஒருவரை தனது நண்பரின் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த பெண், காவல் நிலையத்தில் புகார் அளிக்கவுள்ளதாக ரோஹித் டோமரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணை, ரோஹித் டோமர் ஈவு இரக்கமின்றி கொடூரமாக தாக்கியுள்ளார். இதனை அங்கிருந்த அவரது நண்பர் வீடியோ பதிவு செய்ததாக தெரிகிறது. தற்போது அந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட அப்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது காவல் துணை ஆய்வாளரின் மகன் என்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்க மறுத்துள்ளனர். அதேசமயம், பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவை பார்த்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் உத்தரவின் பேரில், ரோதித் டோமர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கொடூரமான முறையில் இளம் பெண்ணை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் மகன் ரோஹித்திற்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Delhi police sub inspector son attacked young girl video goes viral

டெல்லி டெல்லி காவல்துறை டெல்லியில் பெண் மீது தாக்குதல் பாலியல் வன்கொடுமை Delhi Delhi Police Young girl attacked in delhi
இந்தியா

Leave a comment

Comments