குடியரசுத் தலைவரிடம் விருது பெற்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

குடியரசுத் தலைவரிடம் விருது பெற்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

டெல்லி: குடியரசுத் தலைவரிடம் விருதும், பிரதமர் மோடியிடம் பாராட்டும் பெற்ற பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் குருகிராம் அருகே உள்ள ரிவாரியைச் சேர்ந்த மாணவி சி.பி.எஸ்.சி தேர்வில் சாதனை படைத்திருந்தார். அவருக்கு விருது வழங்கி குடியரசுத் தலைவர் கவுரவித்திருந்தார். பிரதமர் மோடியும் அந்த மாணவியை அழைத்து பாராட்டியிருந்தார்.

தற்போது கல்லூரியில் படித்து வரும் அந்த மாணவி,, பயிற்சி மையத்திற்கு செல்ல பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போது, அங்கு வந்த மர்ம கும்பல் அவரை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. பின்னர், மயக்க நிலையில் இருந்த அந்த மாணவியை பேருந்து நிறுத்தத்தில் போட்டு விட்டுச் சென்றுள்ளது அந்த மர்ம கும்பல்.

இதுகுறித்து அந்த மாணவியின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், புகார் அளித்தும் காவல்துறை இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை என அவரது தாயார் குற்றம்சாட்டியுள்ளார்.

அதேசமயம், குற்றம் எங்கு நடைபெற்றது என தெரியாத நிலையில், அதுகுறித்து வழக்கு பதிவு செய்து, பின்னர் தொடர்புடைய காவல் நிலையத்திற்கு வழக்கை மாற்றும் ஜீரோ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்காப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 Young girl had been Joint sexual assault who got award from president of India

ஹரியானா மாணவி பாலியல் வன்கொடுமை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை haryana girl student sexual assault
இந்தியா

Leave a comment

Comments