புதுச்சேரியை அலறவிட்ட விஜய் ரசிகர்கள்; அரசியல் பயணத்திற்கான முன்னோட்டமா?

புதுச்சேரியை அலறவிட்ட விஜய் ரசிகர்கள்; அரசியல் பயணத்திற்கான முன்னோட்டமா?

புதுச்சேரி: திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புதுச்சேரி சென்ற நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்கள் வழங்கிய பிரம்மாண்ட வரவேற்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விஜய் மக்கள் இயக்கத் தலைவர் புஸி ஆனந்த் மகளின் திருமண வரவேற்பு விழா புதுவையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. அந்த விழாவில் பங்கேற்பதற்காக புதுச்சேரி சென்ற நடிகர் விஜயை வரவேற்று மாநிலம் முழுவதும் வண்ண சுவரொட்டிகள், ராட்சத கட்-அவுட்கள், பேனர்கள் என புதுச்சேரியே வாய்பிளக்கும் அளவிற்கு அசத்தி விட்டனர் அவரது ரசிகர்கள்.

பொதுவாக அரசியல் தலைவர்களுக்கு தான் இது போன்ற தடாலடி வரவேற்புகள் வழங்கப்படும். நடிகர் விஜயும் அரசியலில் களமிறங்குவார் என அவரது ரசிகர்கள் நீண்ட காலமாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட வரவேற்பு, அவரது அரசியல் பயணத்திற்கான முன்னோட்டமாக அமைய வாய்ப்பிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத தமிழக அரசியல் களத்தில் ஸ்டாலினுக்கு போட்டியாக நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் தங்களின் அரசியல் பிரவேசம் குறித்து வெளிப்படையாகவே அறிவித்து விட்டனர். அவர்களின் வரிசையில் விஜய்யும் இணைவாரா என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.

விஜய் அரசியலில் இறங்குவாரா விஜய் ரசிகர்களின் பிரம்மாண்ட வரவேற்பு புதுச்சேரியில் தளபதி விஜய் vijay at pondichery thalapathy vijay politics
தமிழகம்

Leave a comment

Comments