அல்சரை விரட்ட சாப்பிட வேண்டிய உணவுகள்

அல்சரை விரட்ட சாப்பிட வேண்டிய உணவுகள்

இன்றைய அவசர உலகத்தில் ஏராளமானோர் எதிர்கொள்ளும் ஆரோக்கிய பிரச்சனை ‘அல்சர்’. அதாவது வயிற்றில் ஏற்படும் புண். குறிப்பாக, மென்பொருள் துறையில் பணிபுரிபவர்கள் இந்த அல்சர் தொல்லையால் மிகவும் அவதிப்படுகின்றனர்.

 

ஹைட்ரோகுளோரிக் அமிலமும், பெப்சின் எனும் என்சைமும் உணவு செரிப்பதற்காக இரைப்பையில் சுரக்கிறது. சில காரணங்களால் அளவுக்கு அதிகமாகச் இந்த அமிலங்கள் சுரக்கும்போது, குடலின் சுவற்றில் உள்ள மியூகோஸ் படலம் சிதைவடைகிறது. இது இரைப்பை அழற்சி (Gastritis) எனப்படுகிறது. சரியான நேரத்தில் இதை கவனிக்கத் தவறினால், நாளடைவில் இது வயிற்றுப் புண்ணாக (அல்சர்) மாறி விடுகிறது.

 

உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்கள் பொதுவாக பெப்டிக் அல்சர் (Peptic ulcer) எனப்படுகிறது. இரைப்பையில் புண் ஏற்பட்டால் கேஸ்ட்ரிக் அல்சர் (Gastric ulcer) எனவும், முன்சிறுகுடலில் புண் ஏற்படுவது டியோடினல் அல்சர் (Duodenal ulcer) எனவும் அழைக்கப்படுகிறது. சரி..அல்சரை விரட்டுவதற்கான சில எளிய டிப்ஸ்களை இப்போது பார்க்கலாம்!

 

சுத்தமான தண்ணீரை அவ்வப்போது பருகுவது மிகவும் வயிற்றுக்கு ஏற்றதாகும்.

 

காலையில் பசி ஏற்பட்ட பிறகு வெறும் வயிற்றில் அருகம்புல்லை சாப்பிட வேண்டும். பசி எடுப்பதற்கு முன்பு சாப்பிடக்கூடாது.

 

அருகம்புல் சாப்பிட்டு, 2 மணி நேரங்களுக்கு பிறகு ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும்.

 

வாழைத்தண்டுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு சட்னிபோல் அரைத்து சாறு பிழிந்து குடித்து வந்தால் ‘அல்சர்’ காணாமல் போகும்.

 

கொத்தமல்லியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது ‘அல்சர்’ இருப்பவர்களுக்கு நல்ல டானிக் ஆகும். அதுமட்டுமல்லாமல் கொத்துமல்லி பசியை தூண்டக் கூடியதாகும்.

 

மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிடுவதன் மூலம் அல்சர் தவிர பல வயிற்றுப் பிரச்சனைகளை கட்டுப்படுத்தலாம்.

லைப்ஸ்டைல்

Leave a comment

Comments