போக்குவரத்து தொழிலாளர்களின் நலன் காக்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

போக்குவரத்து தொழிலாளர்களின் நலன் காக்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் நலன் காக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு, பனி நிரந்தரம், ஓய்வூதிய பணப்பலன்கள் உள்ளிட்ட ஏராளமான பணப்பலன்கள் நிலுவையில் உள்ளன. அத்துடன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய ஒப்பந்தம் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2016-ஆம் ஆண்டு அமலாக வேண்டிய 13-வது ஊதிய ஒப்பந்தமும் அமலாகவில்லை.

இதையடுத்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 13-வது புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துதல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவை தொகை, மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களிலும், பேச்சு வார்த்தைகளிலும் தொழிலாளர் நலச் சங்கங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. ஆனால், இதுவரை சுமூக தீர்வு எட்டப்படவில்லை.

இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் நலன் காக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், "எம் ஜி ஆர் ஆட்சியிலும், ஜெயலலிதா ஆட்சியிலும் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை போடப்பட்டு தொழிலாளர்களின் நலன் காக்கப்பட்டது. தற்போது ஊதிய ஒப்பந்தத்தை இந்த மக்கள் விரோத அரசு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை என மாற்றி அமைக்க முயற்சிப்பது தொழிலாளர்களின் நலனுக்கு எதிரானதாகும். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் என்பதை பின்பற்றி தொழிலாளர்களின் விரும்பும் வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்தி 1.45 லட்சம் போக்குவரத்து கழக தொழிலாளர்கள், 65000 ஒய்வு பெற்ற தொழிலாளர்களின் நலன் காக்க இந்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

போக்குவரத்து தொழிலாளர்கள் டிடிவி தினகரன் தமிழக அரசு எடப்பாடி பழனிசாமி எம்ஆர் விஜயபாஸ்கர் Transport Employees TTV Dhinakaran TN Govt Edappadi Palamnisamy
தமிழகம்

Leave a comment

Comments