கால்நடை தீவன ஊழல் வழக்கு: லாலு மீதான தீர்ப்பு விவரம் 2-வது முறையாக ஒத்தி வைப்பு

கால்நடை தீவன ஊழல் வழக்கு: லாலு மீதான தீர்ப்பு விவரம் 2-வது முறையாக ஒத்தி வைப்பு

பீகார்: கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மீதான தீர்ப்பு விவரம் இரண்டாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநில முதல்வராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்த காலத்தில் கால்நடைகளுக்காக வாங்கப்பட்ட தீவனத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 1991 முதல் 1994-ஆம் ஆண்டு காலகட்டத்தில் அரசு கால்நடைப் பண்ணைகளுக்கு மாட்டுத் தீவனம் வாங்கியதில் ரூ.89.27 லட்சம் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பான வழக்கு, ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில், லாலுபிரசாத் யாதவ் உட்பட 15 பேர் குற்றவாளிகள் என்று கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதியன்று தீர்ப்பளித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டிருந்த 7 பேரை விடுவித்தும் உத்தரவிட்டது. மேலும், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் ஜனவரி 3-ம் தேதி (நேற்று) அறிவிக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஆனால், தீர்ப்பு விவரம் நேற்று வெளியாகவில்லை. அதேசமயம் தீர்ப்பு விவரம் ஜனவரி 4-ம் தேதி (இன்று) வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில், நாடே பெறும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த இந்த தீர்ப்பு விவரத்தை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இரண்டாவது முறையாக மீண்டும் ஒத்தி வைத்துள்ளது. அதன்படி, லாலி பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் மீதான தீர்ப்பு விவரம் நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

fodder scam lalu prasad yadav cbi cbi court bihar பீகார் லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் மாட்டுத் தீவன ஊழல்
இந்தியா

Leave a comment

Comments