பால் காய்ச்சப்போறோம்..!: வைரலாகும் புதுமையான புதுமனை புகுவிழா அழைப்பிதழ்!

பால் காய்ச்சப்போறோம்..!: வைரலாகும் புதுமையான புதுமனை புகுவிழா அழைப்பிதழ்!

சென்னை: புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டின் கிரஹப்பிரவேச விழாவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ள அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

கல்யாணம், காது குத்து, பூப்பு நீராட்டுதல் என வீட்டு விசேஷங்களுக்கு பத்திரிகை அடிப்பது வழக்கம். குறிப்பாக திருமண பத்திரிகைகளில் உறவினர் பெயர் விடுப்பட்டாலோ, அச்சுப்பிழை இருந்தாலோ திருமணத்தையே நிறுத்திவிடும் அளவிற்கு ஏகப்பட்ட பஞ்சாயத்து கூட்டுவது இந்த பத்திரிகை விவகாரம் தான்.


இந்நிலையில், தனது பெயரைக் கூட வெளிப்படுத்திக் கொள்ளாத நபர், புதிதாக கட்டப்பட்டுள்ள தனது வீட்டின் கிரஹப்பிரவேச விழாவிற்கு மிகவும், எளிமையாகவும், அன்பைக் கொட்டும் வார்த்தைகளாலும் பத்திரிகையை அலங்கரித்துள்ளார். ‘கல்யாணத்த பண்ணிப் பாருங்க.. வீட்டக்கட்டிப்பாருங்கன்னு சொல்வாங்க..’ கல்யாணம் பண்ணிட்டோம் இப்போ வீட்டையும் கட்டிட்டோம் என மிகவும் எளிய பேச்சு வழக்கில் பத்திரிகையின் முதல் வரிகள் துவங்குகின்றன.


பின்னர், கிரஹப்பிரவேசம் நடத்தப்படும் நேரத்தை குறிப்பிட்டு, விடிகாலையில் வர முடியாதவர்கள் விடிந்ததும் வந்து அன்பை பகிர்ந்துக்க ஆசையுடன் அழைக்கிறோம். உங்கள வரவேற்க வாசலில் நானும், எனது மனைவியும், மகனும் காத்திருப்போம்.. வந்துருவீங்கல்லா? என அழைத்துள்ளார்.


இந்த புதுமனை புகுவிழா அழைப்பிதழில் ஹைலைட்டான விஷயமே, உறவினர்கள் பெயர் பட்டியலுக்கு பதிலாக, வீட்டை கட்ட வியர்வை சிந்தி உதவிய உழைப்பாளிகளின் பெயரை போட்டுள்ளார். மேஸ்திரி, தச்சர், கொத்தனார், பெயிண்டர், எலெக்ட்ரீசியன், பிளம்பர், என வீடு கட்ட வியர்வை சிந்தி உழைத்த அத்தனை தொழிலாளர்களின் பெயரும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.


மேலும் வீடு கட்ட உதவியர்கள் பெயரில் பைனான்சியர் முதல் கொண்டு அனைவரது பெயரும் இடம்பெற்றுள்ளது. இறுதியாக ‘பலதரப்பட்ட நகைகள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு வீட்டை கட்டுவது அவ்வளவு சுலபம் இல்லை என்பதை இந்த அழைப்பிதழ் உணர்த்துகிறது. இந்த அழைப்பிதல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

House warming ceremony Innovative Invitation House function Viral புதுமனை புகுவிழா கிரஹப்பிரவேசம் அழைப்பிதழ் புதுமையான அழைப்பிதழ்
லைப்ஸ்டைல்

Leave a comment

Comments