ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ நிர்வாகம் ஆவணங்கள் சமர்பிப்பு

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ நிர்வாகம் ஆவணங்கள் சமர்பிப்பு

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் விசாரணை ஆணையத்தில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம், பல்வேறு நபர்களுக்கு சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டு என சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆவணங்களை ஜனவரி 12-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் விசாரணை ஆணையம் கெடு விதித்திருந்தது.

அதன்படி, ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ நிர்வாகம் சார்பில் 2 பெட்டிகளில் ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை அப்பல்லோ நிர்வாகம் சமர்ப்பித்துள்ளது.

apollo hospital jayalalithaa jayalalithaa death jayalalithaa video arumugasamy commission அப்பல்லோ மருத்துவமனை ஜெயலலிதா ஜெயலலிதா வீடியோ
தமிழகம்

Leave a comment

Comments