உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக மூத்த நீதிபதிகள் குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக மூத்த நீதிபதிகள் குற்றச்சாட்டு

டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் நான்கு பேர் போர்க்கொடி தூக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வரலாற்றில் முதன்முறையாக உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகுர், குரியன் ஜோசப் ஆகிய நான்கு பேர் செய்தியாளர்களை இன்று சந்தித்தனர். அப்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, வழக்குகளை பிரித்து கொடுப்பதில் பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர்கள் முன் வைத்தனர்.

உச்ச நீதிமன்ற நிர்வாகத்தில் கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன. தலைமை நீதிபதியின் செயல்பாடுகள் சரியில்லை, நீதித்துறையில் குளறுபடிகள் நீடித்தால் நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது என குற்றம் சாட்டிய அவர்கள், நீதித்துறையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 4 மாதங்களுக்கு முன்பு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினோம். அதன்பின்னர், எங்களது நேர்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது எனவும் வேதனை தெரிவித்தனர்.

நீதித்துறை, ஜனநாயகத்தை பாதுகாக்க செய்தியாளர்களை சந்திக்கும் நிலைக்கு வந்துள்ளோம் என தெரிவித்த அவர்கள், செய்தியாளர்களை சந்திப்பதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும் விளக்கமளித்தனர்.

உச்ச நீதிமன்றம் தீபக் மிஸ்ரா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி supreme coourt CJI Chief Justice of India
இந்தியா

Leave a comment

Comments