தமிழக காங்கிரஸ் தலைவர் விரைவில் மாற்றம்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பகீர் தகவல்

தமிழக காங்கிரஸ் தலைவர் விரைவில் மாற்றம்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பகீர் தகவல்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைமைக்கு புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்பட உள்ளார் என்று முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தியின் பிறந்த நாள் மற்றும் சமத்துவ பொங்கல் விழா சென்னை செனாய் நகரில் இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் பங்கற்ற பெண்களுக்கு பொங்கல் இலவச பொருட்களை தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தை பிறந்தால் வழி பிறக்கும். தமிழகத்திலும் பொங்கலுக்கு பிறகு நல்ல தகவல் வரும். தமிழக காங்கிரஸ் தலைமைக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளார். இதற்கான நடவடிக்கையை கட்சி மேலிடம் விரைவில் தொடங்கும் என நம்புகிறேன். தமிழக காங்கிரஸூக்கு விரைவில் நல்ல காலம் பிறக்கும் எனக்கூறினார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பின்னர், காங்கிரஸ் மாநில தலைவர்கள் தற்போது மாற்றப்பட மாட்டார்கள் என அவர் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் விரைவில் மாற்றப்படுவார் என இளங்கோவன் கூறியுள்ளது தமிழக காங்கிரஸார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் தற்போது இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Evks Ilangovan congress tamilnadu leader Thirunavukarasar Rahulgandhi sonia gandhi ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் தமிழ்நாடு தலைவர் திருநாவுக்கரசர் ராகுல்காந்தி
தமிழகம்

Leave a comment

Comments