ஆதார் ஆணையத்தையே கைது செய்ய சொல்லும் முன்னாள் சி.ஐ.ஏ கணினி நிபுணர் !

ஆதார் ஆணையத்தையே கைது செய்ய சொல்லும் முன்னாள் சி.ஐ.ஏ கணினி நிபுணர் !

டெல்லி: ஆதார் அமைப்பின் குற்றங்களை வெளிப்படுத்திய பத்திரிகையாளரை கைது செய்வதை விடுத்து, குற்றத்திற்கு காரணமான ஆதார் அமைப்பை கைது செய்ய வேண்டும் என முன்னாள் சி.ஐ.ஏ கணினி நிபுணரான எட்வர்டு ஸ்னோடென் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.வில் கணினி நிபுணராக பணியாற்றி வந்தவர் எட்வர்டு ஸ்னோடென். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் உளவு ரகசியங்களை அம்பலப்படுத்தினார். இதன் காரணமாக அமெரிக்க அரசால் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்பதால், தற்போது எட்வர்டு ஸ்னோடென் ரஷ்யாவில் தலைமறைவாக இருக்கிறார்.

இதனிடையே, ஒரு பில்லியனுக்கும் அதிகமான ஆதார் தகவல்கள் ரூ.500-க்கு விற்கப்படுவதாக ‘தி டிரிபியூன்’ என்ற பத்திரிகை சில நாட்களுக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தது. இதனை மறுத்த ஆதார் ஆணையம், அந்த பத்திரிகையின் மீதும், இந்த தகவலை வெளிப்படுத்திய பத்திரிகையாளர் மீதும் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து எட்வர்டு ஸ்னோடென் சமூகவலைத்தளமான டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ஆதார் மீறல்கள் குறித்த செய்தியை வெளிக்கொண்டு வந்த செய்தியாளருக்கு விருது அளிக்க வேண்டுமே தவிர விசாரணை நடத்தக் கூடாது. அரசாங்கம் உண்மையிலேயே நீதி பற்றிய அக்கறை கொண்டிருந்தால், அவர்களுடைய கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையெனில், அவர்களுடைய கொள்கைகள், 100 கோடி இந்தியர்களின் தனியுரிமையை அழித்துவிடும். இதற்குக் காரணமானவர்களை அரசு கைது செய்ய வேண்டுமெனில், ஆதார் ஆணையத்தை தான் கைது செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஆதார் ஆதார் ஆணையம் ஆதார் கார்டு எட்வர்டு ஸ்னோடென் சிஐஏ டிவிட்டர் அமெரிக்கா ரஷ்யா Aadhar Aadhar card edward snowden america russia twitter USA CIA
இந்தியா

Leave a comment

Comments