பார்வையற்றோர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா-ஆஸி.,போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது

பார்வையற்றோர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா-ஆஸி.,போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது

துபாய்: பார்வையற்றோர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான ஒருநாள் போட்டி மழையின் காரணமாக பாதியில் கைவிடப்பட்டது.

 

5-வது பார்வையற்றோர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. முதல் ஓவரிலேயே அந்த அணியின் டேனியல், தீபக் மாலிக்கால் ரன் அவுட் செய்யப்பட்டு ஆட்டமிழந்து வெளியேறினார். 

அடுத்து களமிறங்கிய ஸ்டெபன் நீரோவும், இந்திய அணியின் கணேஷ் முந்த்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 3  ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 26 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனைத் தொடர்ந்து, இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான ஒருநாள் போட்டி பாதியில் கைவிடப்பட்டது. இவ்விரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.

கிரிக்கெட் உலகக் கோப்பை இந்தியா ஆஸ்திரேலியா துபாய் cricket world cup india
விளையாட்டு

Leave a comment

Comments