சூர்யாவுடன் நடிக்கும் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்?

சூர்யாவுடன் நடிக்கும் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்?

சென்னை: சூர்யா நடிப்பில்ல் உருவாகவிருக்கும் ‘சூர்யா 37’வது படத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் 37வது படத்தை இயக்குநர் கே.விஆனந்த் இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை நடிக்க வைக்க இயக்குநர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

தெலுங்கில் மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் ‘சைரா ரெட்டி நரசிம்மா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், அமிதாப் பச்சனை சந்தித்து கதை கூற காத்திருப்பதாகவும், இந்த கதைக்கு அமிதாப் நிச்சயம் சம்மதிப்பார் என்றும் இயக்குநருக்கு நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

சூர்யா-கே.வி.ஆனந்த் கூட்டணியில் ‘அயன்’, ‘மாற்றான்’ போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்ற நிலையில் இருவரும் மீண்டும் கூட்டணி அமைக்கின்றனர். இதற்கிடையே செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 36’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்துவிட்டு கே.வி.ஆனந்த் பட பணிகளை சூர்யா துவங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா அமிதாப் பச்சன் கே.வி.ஆனந்த் தமிழில் அமிதாப் சிரஞ்சீவி சூர்யா 37 Suriya Suriya 37 Amitabh Bachchan Amitabh in Suriya Movie KV Anand Amitabh in Tamil
சினிமா

Leave a comment

Comments