ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்? உங்களுக்கான சில டிப்ஸ்

ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்? உங்களுக்கான சில டிப்ஸ்

இன்றைய ஃபாஸ்ட் புட் சூழ்ந்த உலகில் பலர் உடல் பருமனால் சிரமப்படுகிறார்கள். இந்த உடல் பருமனைக் குறைப்பதற்கு ஏராளமான வழிகளைப் பலர் அன்றாடம் பின்பற்றி வருகிறார்கள். 

தங்களுக்கு தெரிந்த உடற்பயிற்சிகளை செய்து உடல் எடையை குறைக்க பல முயற்சிகளை செய்து வருகிறார்கள். அதிலும் சிலர் ஜிம்மிற்கு சென்று தான் உடலை குறைப்பேன் என செல்கிறார்கள்.  அவ்வாறு ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்யும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஜிம்முக்கு சென்று உடல் எடையை குறைப்பது என்பது ஒரு நீண்ட பயணம். நீங்கள் இந்த முயற்சியில் வெற்றியை விட தோல்வியையே அதிகமாக சந்திப்பீர்கள் என்பதே யதார்த்தம். ஏனேனில் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்பவருக்கே ஜிம் உடற்பயிற்சி சிறந்ததாகும். 

உங்கள் உடல் “கொழுப்பு சேமிக்கும் கிடங்காக” பல காலம் இருந்தபடியால், உடனே கொழுப்பை கரைக்க அது பல வகையில் முட்டுக்கட்டை போடும். அதனால் மனம் தளராமல் தினமும் முயற்சியை தொடரவேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் உடல் பயிற்சி செய்யத் தொடங்கிய சில வாரங்ககுக்கு உடல் எடை குறைப்பு நடைபெறும். ஆனால் போகப்போக உடல் எடை குறைப்பு குறைவாகவே காணப்படும். இதனால் ஒரு வித அலுப்பு உங்களுக்கு தோன்றலாம். நல்ல மனவலிமையால் மட்டுமே இந்த பாதிப்புகளில் இருந்து விடுபட முடியும்.
 அதனால் எக்காரணம் கொண்டும், வெற்றி எளிதாக வந்து சேரும் என்று எண்ணி விட வேண்டாம்.  

ஜிம்மிற்கு சென்று பல பயிற்சிகளை செய்வேன், ஆனால் பிடித்த உணவுபண்டங்களை சாப்பிடுவேன் என்று நினைத்தால், அங்கே தான் நீங்கள் தவறு செய்கிறீர்கள்.  ஆரோக்கியமான உணவு உட்கொள்கிறோமா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். சரியான உணவு மிக முக்கியம் என்பது உண்மை. உடல் பயிற்சியும், சரியான டயட்டும் (diet) மிக முக்கியமானது.  

பருமனானவர்கள் கண்டிப்பாக உங்கள் மருத்துவரை சந்தித்து என்னென்ன உடல் பயிற்சிகளை செய்யலாம், செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 
உங்களுக்கு இதய சம்பந்தமான நோய்கள் இருக்கும் பட்சத்தில் மேலும் சிக்கல் உண்டு. நீங்கள் கண்டிப்பாக உங்கள் மருத்துவரை நாடியே தீர வேண்டும். ஏனென்றால் சில உடற்பயிற்சி முறைகள் விபரீதமாக முடிய உண்டாக்க வாய்ப்புகள் உண்டு.

exercise gym food control doctor tips life style உடல்பயிற்சி ஜிம் உணவு கட்டுப்பாடு டாக்டர் டிப்ஸ்
லைப்ஸ்டைல்

Leave a comment

Comments