ரேசன் கடைகளில் இனி உளுந்தம் பருப்பு கிடையாது: அமைச்சர் செல்லூர் ராஜூ

ரேசன் கடைகளில் இனி உளுந்தம் பருப்பு கிடையாது: அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னை: விலை உயர்ந்துவிட்டதால் ரேஷன் கடைகளில் இனி உளுந்தம் பருப்பு வழங்க முடியாது என சட்டசபையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

தமிழகத்தில் ஏழை-எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தி வருவது ரேஷன் கடைகளைத்தான். இலவச அரிசி , சர்க்கரை, எண்ணெய், பருப்பு, உளுந்தம்பருப்பு, கோதுமை உள்ளிட்டவைகள் இங்கு வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலை கிலோவுக்கு ரூ.13.50-ல் இருந்து ரூ.25 ஆக உயர்த்தப்பட்டது. உணவு பாதுகாப்புத் திட்டத்தை தமிழக அரசு ஏற்றுக்கொண்ட பிறகு மத்திய அரசு ரேஷன் பொருட்களுக்கு வழங்கி வந்த மானியத்தை ரத்து செய்தது. இதனிடையே ரே‌ஷன் கடைகளில் உளுந்தம் பருப்பு வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கூட்டுறவு த்துறை அமைச்சர் செல்லூர் ராஜு இனி ரேஷன் கடைகளில் உளுந்து விநியோகம் இல்லை என்று தெரிவித்தார். விலை உயர்வு, மத்திய அரசின் மானியம் நிறுத்தம் காரணமாக உளுந்து விநியோகம் இல்லை என்று தெரிவித்தார்.
assembly tamilnadu sellur raju சட்டசபை தமிழ்நாடு செல்லூர் ராஜூ
தமிழகம்

Leave a comment

Comments