வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்: நடிகர் கமல் பொங்கல் வாழ்த்து

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்: நடிகர் கமல் பொங்கல் வாழ்த்து

சென்னை: உலகம் முழுவதும் தமிழர்களால் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் தனித்துவமான திருநாளான பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. உழவர்களை போற்றிடும் திருநாளாகவும், உழவு தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் சூரிய பகவானுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நன்நாளாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.


இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள்.  இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு" என பதிவிட்டுள்ளார்.

தமிழகம் கமல்ஹாசன் பொங்கல் பொங்கல் பண்டிகை kamalhaasan pongal pongal festival
சினிமா

Leave a comment

Comments