நடிகர் சௌந்தரராஜா-தமன்னா திருமண நிச்சயதார்த்தம்

நடிகர் சௌந்தரராஜா-தமன்னா திருமண நிச்சயதார்த்தம்

சென்னை: சசிக்குமாரின் ‘சுந்தரபாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையிலகில் அறிமுகமான நடிகர் சௌந்தரராஜா-தமன்னா ஜோடிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ஜிகிர்தண்டா’, ‘தர்மதுரை’, ‘எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’, ‘திருட்டுப்பயலே 2’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவர், ஜல்லிக்கட்டு போராட்டம், மரக்கன்று நடுதல், கருவேல மரங்கள் அழித்தல் போன்ற பல்வேறு சமூக பணிகளிலும் ஈடுபடுபவர்.


நடிகர் சௌந்தரராஜாவுக்கும், ‘க்ரீன் ஆப்பிள் எண்டர்டெய்ன்மெண்ட்’ நிறுவனத்தின் நிறுவன அதிகாரியுமான தமன்னாவுக்கும் உறவினர்கள் மற்றும் நெருங்கிய திரை பிரபலங்கள் பங்கேற்க உசிலம்பட்டியில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 


இவர்களது திருமணம் வருகிற மே மாதம் மதுரையில் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

திருமண நிச்சயதார்த்தம் நடிகர் சௌந்தரராஜா தமன்னா சுந்தரபாண்டியன் SundaraPandiyan Sasikumar Soundarraja Tamanna Wedding engagement
சினிமா

Leave a comment

Comments