அமேசான் இந்தியா நிறுவனத்தின் ஆன்லைன் பரிவர்த்தனை 60 சதவீதமாக உயர்வு

அமேசான் இந்தியா நிறுவனத்தின் ஆன்லைன் பரிவர்த்தனை 60 சதவீதமாக உயர்வு

பெங்களூரு: அமேசான் இந்தியா நிறுவனத்தின் ஆன்லைன் பரிவர்த்தனை நடப்பாண்டில் 60 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்களில் ஒன்றான அமேசான் இந்தியா நிறுவனத்தில் தினமும் லட்சக்கணக்கானோர் பொருட்களை வாங்கி வருகின்றனர். வாடிக்கையாளர்கள் கேஷ் ஆன் டெலிவரி மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் பணம் செலுத்தி பொருட்களை வாங்க முடியும். 2015-ஆம் ஆண்டு அமேசான் இந்தியா நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக செய்யப்பட்ட பரிவர்த்தனை 50 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், நடப்பாண்டில் அது 60 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அமேசான் பே வாலட் என்ற வசதியை கொண்டு வந்ததே, இந்த வேகமான வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது. அமேசான் பே வாலட்டில் ஏராளமான சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதால், அதில் வைக்கப்படும் பண இருப்பு ஆண்டுதோறும் 409 சதவீதம் அளவுக்கு உயர்ந்து அசுர வளர்ச்சியை அடைந்து வருகிறது. அமேசான் பே வாலட் கணக்குகள் மூலமாக 48 சதவீத ஆன்லைன் பரிவர்த்தனைகள் அமேசான் இந்தியா நிறுவனத்தில் நடைபெறுகிறது.

tech news technology amazon india online shopping அமேசான் இந்தியா
தொழில்நுட்பம்

Leave a comment

Comments