தீபாவளியை தெறிக்கவிட திட்டம்போட்ட தளபதி

தீபாவளியை தெறிக்கவிட திட்டம்போட்ட தளபதி

சென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘தளபதி 62’ படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தின் அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. அதைத் தொடர்ந்து இப்படத்திற்காக விஜய் கலந்துக் கொண்ட ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

ஸ்டைலிஷ் தோற்றத்தில் விஜய் நடிக்கும் 62வது படத்தின் பூஜை ஈ.சி.ஆரில் இன்று காலை நடைபெற்றது. பூஜையை தொடர்ந்து க்ளாப் போர்ட் அடித்து இப்படத்தின் ஷூட்டிங்கை நடிகர் விஜய் துவங்கி வைத்தார்.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவிருக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்பதை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் சூசகமாக தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் தளபதி 62 விஜய் தளபதி 62 பூஜை ஏ.ஆர்.முருகதாஸ் ஏ.ஆர்.ரகுமான் கீர்த்தி சுரேஷ்
சினிமா

Leave a comment

Comments