உயரத்தை கிண்டலடித்த தொகுப்பாளினிகளை வறுத்தெடுத்த சூர்யா ரசிகர்கள்!

உயரத்தை கிண்டலடித்த தொகுப்பாளினிகளை வறுத்தெடுத்த சூர்யா ரசிகர்கள்!

சென்னை: பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளினிகள் லைவ் ஷோவில் நடிகர் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்யும் விதமாக பேசியது பரபரப்பை ஏற்படுதியுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ’தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், பிரபல தொலைக்காட்சியில் லைவ் ஷோவாக ஒளிபரப்பான கிசுகிசு நிகழ்ச்சியில் பேசிய இரு தொகுப்பாளினிகள் சூர்யாவின் உயரத்தை கிண்டலடித்துள்ளனர்.

’சிங்கம்’ படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக நடிக்கும் போதே ஹீல்ஸ் போட்டுத்தான் நடிச்சாரு.. அமிதாப் பச்சனுக்கு ஸ்டூல் போட்டு ஏறி நின்னு தான் அவர் பேசணும்..’ என்று கூறியுள்ளனர். இதில் கடுப்பான சூர்யா ரசிகர்கள் ட்விட்டரில் தொகுப்பாளினிகளை வறுத்தெடுத்து வருகின்றனர்.


சூர்யா தொகுப்பாளினிகள் சூர்யாவின் உயரம் ரசிகர்கள் கடுப்பு கிண்டல் சூர்யா-அமிதாப் Suriya Thaana Serndha Koottam TSK suriya height Suriya Amitabh Bachchan Singam Television Hosts
சினிமா

Leave a comment

Comments