சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ டீசர் படைத்த புதிய சாதனை

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ டீசர் படைத்த புதிய சாதனை

சென்னை: சூர்யா நடித்துள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் டீசர் அதிக லைக்ஸ் பெற்ற இந்திய திரைப்பட டீசர்களில் இரண்டாவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் கடந்த நவ.30ம் தேதி வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், யூடியூபில் அதிக லைக்ஸ் பெற்ற தமிழ் திரைப்படங்களின் பட்டியலில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ டீசர் இரண்டம் இடத்தை பெற்றுள்ளது. ஏற்கனவே மெர்சல், விவேகம் ஆகிய படங்கள் இடம்பெற்றிருந்தன.

தற்போது அஜீத்தின் விவேகம் படத்தின் சாதனையை பின்னுக்குத் தள்ளி  சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ டீசர் அதிக லைக்ஸ்கள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. இதனை #TSKSecondMostLikedIndianTeaser என்ற ஹேஷ்டேக் மூலம் சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில், சத்யன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் இம்மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தினை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Suriya Thaanaa Serndha koottam Most Liked Indian Teaser Pongal release Anirudh Vignesh shivan சூர்யா தானா சேர்ந்த கூட்டம் பொங்கல் வெளியீடு விக்னேஷ் சிவன் அனிருத்
சினிமா

Leave a comment

Comments