மோசமாக உடையணியும் மனிதராக ஹாலிவுட் நடிகர் ‘கிட் ஹேரிங்டன்’ தேர்வு

மோசமாக உடையணியும் மனிதராக ஹாலிவுட் நடிகர் ‘கிட் ஹேரிங்டன்’ தேர்வு

நியூயார்க்: ஹாலிவுட் நடிகர் ‘கிட் ஹேரிங்டன்’ மோசமான ஆடை அணியும் மனிதராக ஜி.க்யூ பேஷன் இதழின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் பிரபல பேஷன் இதழான ஜி.க்யூ சிறப்பான மற்றும் மோசமான உடை அணியும் மனிதர்களை பட்டியலிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலை தயாரிக்க, பேஷன் துறை வல்லுனர்களான ஜியார்ஜியோ ஆர்மனி மற்றும் சர் பால் ஸ்மித் ஆகியோர் உதவியுள்ளனர்.

மோசமான உடை அணிபவர்கள் பட்டியலில் ‘கேம் ஆஃப் த்ரோன்’ தொலைக்காட்சி தொடர்களில் நடித்த கேட் ஹேரிங்டன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 2-வது இடத்தில் காமெடி நடிகரான பால் மெர்டன் உள்ளார். அதேசமயம், சிறப்பாக உடையணியும் மனிதர்கள் பட்டியலில் நடிகர் மேட் ஸ்மித் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். 3-வது இடத்தில், ‘ஜுராசிக் பார்க்’ படத்தின் மூலமாக நமக்கு நன்கு பரிச்சயமான நடிகர் ஜெஃப் கோல்ட்ப்ளம் உள்ளார்.

சினிமா

Leave a comment

Comments