எண்ணெய் வழியும் சருமம் கொண்டவர்களுக்கு எளிய டிப்ஸ்

எண்ணெய் வழியும் சருமம் கொண்டவர்களுக்கு எளிய டிப்ஸ்

ஒரு சிலருக்கு எண்ணெய் வடிவது போன்ற சருமம் இருக்கும். அவர்கள் எவ்வளவு சோப்பு போட்டு முகத்தைக் கழுவினாலும் அந்த எண்ணெய் பசை போகாது. மேக்கப் செய்தால் கூட முகத்தில் எண்ணெய் போன்ற பிசுபிசுப்பு தொடர்ந்து வடியும். அப்படிப்பட்ட சருமம் கொண்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய சில எளிமையான டிப்ஸ் இதோ...! 

கடைந்த மோரை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி, சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு இளஞ்சூடான தண்ணீரில் முகத்தைக் கழுவினால் எண்ணெய் வழியும் சருமம் பொலிவடையும். 

பிசுபிசுப்பான சருமம் கொண்டவர்கள் அதிக கெமிக்கல் சேர்க்காத மூலிகை சோப்புகளை பயன்படுத்த வேண்டும். 

எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளையும், வாயுவை அதிகரிக்கக் கூடிய உணவுகளையும் தவிர்க்க வேண்டும். 

முட்டைக்கோஸ், கேரட் ஆகியவற்றை வேக வைத்த நீரை கீழே கொட்டிவிடாமல், அதை ஆற வைத்து முகம் கழுவி வந்தால் முகம் பொலிவாக மாறும். 

25 கிராம் கறுப்பு திராட்சையில், விதைகளை நீக்கி சாறு எடுத்து, முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு பிறகு இளஞ்சூடான நீரில் கழுவினால் முகம் பளிச்சென்று மாறும். 

தினமும் உணவில் கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல அஜீரணக்கோளாறுமலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

லைப்ஸ்டைல்

Leave a comment

Comments