கோமாதா குறித்த ஆன்மிக தகவல்கள்!!

கோமாதா குறித்த ஆன்மிக தகவல்கள்!!

பசுமாடு எங்கெல்லாம் நன்றாக பராமரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் லஷ்மி கடாக்ஷம் இருக்கும். அதனால்தான் தெய்வசக்தி நிறைந்த கோயில்களில் கூட பசுமாடுகளை வளர்த்து அதற்கு முறையாக ’கோ பூஜை’ செய்யும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். எவ்விதமான தோஷத்தையும் போக்கும்  ஆற்றல் பசுவுக்கு இருக்கிறது. இப்போது கோமாதா குறித்த அரிய ஆன்மிகத் தகவல்களை தெரிந்து கொள்வோம்!!

**ஒரு பெண் உருதுவானதும் தோஷங்கள் நீங்க பசுக்களை தானம் செய்யலாம்.

**கோவில்களில் விளக்கேற்ற பசுக்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் தானம் செய்வதை ஆதி தமிழர் கள் வழக்கத்தில் வைத்திருந்தனர்.

**பசு தானம் அடிக்கடி செய்வது வம்ச விருத்தியை உறுதி செய்யும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது.

**பசுவையும் கன்றையும் யார் ஒருவர் நன்கு பராமரிப்பு செய்கிறாரோ, அவரது இருபத்தோரு தலைமுறைக்கு நற்கதி உண்டாகும்.

**கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கறுப்பு நிற பசுவை தானம் செய்தால் பரிகாரம் உண்டாகும்

**விளை நிலங்களில் சிறு பகுதியையாவது வருடந்தோறும் மாறி மாறித் தரிசாக விடுவது நிலங்களுக்கு நல்லது. மாடுகளுக்கும் புல் மேய்விடம் கிடைக்கும்.

**வசதியுள்ளவர்கள் வழிப்போக்கு மாடுகளுக்காக சிறிதளவு வைக்ககோல் போட்டு வைக்க வேண்டும்.

**பசுங்கன்று பால் மணம் மாறும் முன்பே சினைப்படுத்தி, கன்று ஈனச் செய்து பால் கறப்பது முறையல்ல.

**நமக்கு வருவாய் அளிக்க இயலாத நலிந்த பசு மாடுகளை, பசுக்களை பராமரிக்கும் பசு மடங்களிலும் தொழுவங்களிலும் சேர்ப்பிக்க வேண்டும்.

**பசுக்களை அவற்றின் இயற்கையான அந்திமக் காலம் வரை பராமரித்துக் காக்க வேண்டும்.

கோமாதா பசு மாடு ஆன்மிகம் Spiritual Komadha
ஆன்மிகம்

Leave a comment

Comments