பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை முந்திய விராட் கோஹ்லி!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை முந்திய விராட் கோஹ்லி!

டெல்லி:  2016ம் ஆண்டு விலை மதிப்புமிக்க பிரபலமானவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஷாருக்கானை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முந்தியுள்ளார்.

பன்னாட்டு மதிப்பு மற்றும் விளம்பரம் மூலம் ஒருவர் சம்பாதிக்கும் பணம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்து இந்தியாவின் மிகவும் மதிப்பு மிக்க பிரபலமானவர்கள் பட்டியல் ஆண்டு தோறும் வெளியிடப்படுகிறது. 2017 ம் ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி முதலிடம் பிடித்துள்ளார். அவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை முந்தினார்.

விராட் கோஹ்லியின் விலை மதிப்பு இந்த ஆண்டில் ரூ.923 கோடியாகும். விலை மதிப்பு பிரபலமானவர்கள் பட்டியலில் ஷாருக்கான் 2-வது இடத்தில் உள்ளார். அவரது மதிப்பு ரூ.679 கோடியாகும்.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே (ரூ.595 கோடி) 3-வது இடத்திலும், அக்‌ஷய் குமார் (ரூ.301 கோடி) 4-வது இடத்திலும், ரன்விர்சிங் (ரூ.269 கோடி) 5-வது இடத்திலும், சல்மான்கான் (ரூ.250 கோடி) 6-வது இடத்திலும் உள்ளனர்.

Virat Kohli Shah Rukh Khan celebrity india விராட் கோஹ்லி ஷாருக்கான் பிரபலமானவர்
இந்தியா

Leave a comment

Comments