காருக்கு பெட்ரோல் வேண்டாம்...பீர் போதுமாம் - விஞ்ஞானிகள்

காருக்கு பெட்ரோல் வேண்டாம்...பீர் போதுமாம் - விஞ்ஞானிகள்

லண்டன்: பீர் மதுபானத்தை எரிபொருளாக நிரப்பி வாகனத்தை ஓட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் வளங்கள் வேகமாக குறைந்து வருகின்றன. இதனால் மாற்று எரிபொருள் சக்தியை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இல்லையேல் வாகனங்களை வீட்டிலேயே காட்சிப்பொருளாக வைத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படக் கூடும். இதனால் மாற்று எரிபொருளை கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் பலர் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில், மதுபானங்களை எரிபொருளாக பயன்படுத்துவது குறித்து இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வந்தனர். மதுவில் உள்ள எத்தனாலை, பியூட்டனாலாக மாற்றினால் அதை வாகனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்த முடியும். ஆனால் எவ்வளவு முயற்சித்தும் விஞ்ஞானிகளால் எத்தனாலை, பியூட்டனாலாக மாற்ற முடியவில்லை. இதைத் தொடர்ந்து பீர்மீது இச்சோதனையை விஞ்ஞானிகள் முடுக்கி விட்டனர். அதற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. அந்த சோதனை வெற்றியில் முடிந்தது. இதன்மூலம் பீரை எரிபொருளாக நிரப்பி வாகனங்களை இயக்க முடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

மேலும், பீர் மூலமாக தயாரிக்கப்பட்ட எரிபொருள் வாகனத்திற்கு அதிக மைலேஜ் கிடைத்ததையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் எத்தனாலை, பியூட்டனலாக மாற்றும் வினைச்செயல் நடைபெற அதிக காலம் ஆகும். இதன் காரணமாக உடனடியாக இந்தக் கண்டுபிடிப்பை பயன்பாட்டிற்கு கொண்டுவர முடியாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உலகம்

Leave a comment

Comments