சருமம் பளபளக்க; அழகை தக்க வைக்க!!

சருமம் பளபளக்க; அழகை தக்க வைக்க!!

அனைவரும் தன் தோற்றத்தை அழகுபடுத்திக் கொள்ளவே விரும்புவர். அதிலும் இளம் பருவத்தினருக்கு தன்னை அழகு படுத்திக்கொள்வதில் நாட்டம் அதிகம் இருக்கும். அதற்காக பல ரசாயனம் கலந்த கிரீம்களைத் தடவி தன்னை அழகுபடுத்திக் கொள்வர். இது சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்திவிடும். எனவே, கூடுமான அளவிற்கு இயற்கை வழிமுறையை பின்பற்றவும்.

**ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்­ணீராவது அருந்த வேண்டும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

**அதிக குளிரூட்டிய பானங்கள், உணவுப் பொருட்கள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், கொழுப்புச் சத்து அதிகம் உள்ள பொருட்கள் போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.

**மென்மையான உணவுகளை அதிகம் சாப்பிடவேண்டும். பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

**தினமும் இருமுறை குளிக்க வேண்டும். சோப்புகளை அடிக்கடி மாற்றக் கூடாது. இவை உடலில் அலர்ஜியை ஏற்படுத்தும்.

**கோபம், மன அழுத்தம் இவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும். யோகா தியானம் செய்தால் உடலின் இரத்த ஓட்டம் சீராகி அனைத்து உறுப்புகளும் பலம் பெறும். இதனால் தோல் பளபளப்பதுடன், தேஜஸூம் அதிகரிக்கும்.

**பச்சைப் பயறு -  250 கிராம், மஞ்சள் -  100 கிராம், வசம்பு -  10 கிராம்; எடுத்து அரைத்து சோப்புக்குப் பதிலாக தேய்த்து குளித்து வந்தால் சருமத்தின் வறட்சி குறைந்து பளபளப்புடன் காட்சியளிக்கும்.

அழகு சருமம் பளபளக்க லைப்ஸ்டைல் அழகு குறிப்பு Beauty tips beauty skin reduce dryness
லைப்ஸ்டைல்

Leave a comment

Comments