பால்வளி மண்டலத்தில் 80 கோடி மடங்கு பெரிய கருந்துளை.. சிலி நாட்டு விஞ்ஞானி கண்டுபிடிப்பு

பால்வளி மண்டலத்தில் 80 கோடி மடங்கு பெரிய கருந்துளை.. சிலி நாட்டு விஞ்ஞானி கண்டுபிடிப்பு

சாண்டியாகோ: இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருந்துளைகளை விட சுமார் 80 கோடி மடங்கு பெரிய கருந்துளையை சிலி நாட்டு விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார்.

விண்வெளியில் உள்ள விஷயங்களில் மனிதனால் சரிவர புரிந்துகொள்ள முடியாத எண்ணற்ற விசித்திர விஷயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று கருந்துளை ஆகும். கருந்துளை என்பது விண்வெளியின் ஒரு பகுதியாகும். இது மிகவும் அடர்த்தியான ஒன்று. பால்வெளி மண்டலத்தில்
 உள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள், துகள்கள், விண்கற்கள் ஆகிய அனைத்தும் கருந்துளைக்குள் சென்றால் அழிந்து விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதுவும் கூட உறுதியான கூற்று இல்லை. கருந்துளை பற்றிய ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது அது தொடர்பான தகவல்களையும் வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் சிலி நாட்டின் லாஸ் கம்பனாஸ் பகுதியில் உள்ள மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் எட்வர்டோ என்ற விஞ்ஞானியும் கருந்துளைகள் குறித்த ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
 

தற்போது அவர் புதிய மிகப்பெரிய கருந்துளை ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கருந்துகளைக் காட்டிலும், 80 கோடி மடங்கு அளவுக்கு மிகப்பெரிதாக அந்த கருந்துளை இருப்பதாக எட்வர்டோ கூறியுள்ளார். மேலும், அந்தக் கருந்துளை பூமியில் இருந்து சுமார் 130 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகம்

Leave a comment

Comments