உடல் எடையைக் குறைக்க சில எளிய உணவு முறைகள்

உடல் எடையைக் குறைக்க சில எளிய உணவு முறைகள்

உலகிலுள்ள ஏராளமான மக்கள் வருத்தப்பட்டு புலம்பும் ஒரு விஷயம் என்றால் அது உடல் பருமன் பிரச்சனை தான். நம் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க, சில எளிய உணவு கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் போதும். உடல் எடையைக் குறைப்பதற்கான சில எளிய டிப்ஸ் இதோ...உங்களுக்காக!

சாப்பிட்ட பிறகு உடல் பயிற்சி செய்யக் கூடாது. சாப்பிடும் முன்பு உடற்பயிற்சி செய்வதுதான் சரியான முறை ஆகும்.

சூடான தண்ணீர் குடிப்பது உடல் எடை குறைக்கும் மிக எளிய வழிகளில் ஒன்று.

மூன்று வேளையாக சாப்பிடாமல் 3 மணி நேர இடைவெளியில் 6 தடவையாக சாப்பிடலாம். உடல் எடையைக் குறைக்க நிறைய பேர் பின்பற்றும் டயட்டிங் முறை இது.

மெதுவாக, நன்றாக மென்று சாப்பிடுவதன் மூலம் நாம் உணவு எடுத்துக் கொள்ளும் அளவு குறையும்.

இரவில் ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்து முதலில் அதை சாப்பிட வேண்டும். கொள்ளு ரசம்,கொள்ளு சுண்டல் ஆகியவற்றை செய்தும் சாப்பிடலாம்.

உடல் எடை அதிகரிப்பதற்கான காரணங்களில் காலை உணவை தவிர்ப்பதும் முக்கியமான ஒரு காரணமாகும். எனவே காலை உணவு எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

பெரும்பாலும் ஆவியில் வேக வைத்த உணவு, நீர், காய்கறிகள் ஆகியவற்றை உன்ன வேண்டும். வாரம் ஒருமுறை மட்டும் பொரித்த உணவு, ஸ்வீட்ஸ் என்று சாப்பிடலாம்.

வாரம் ஒருமுறை ஓட்ஸ், பார்லி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எண்ணெய் சேர்த்த உணவுகள், மட்டன், ஸ்நாக்ஸ் போன்ற கலோரி அதிகமுள்ள பொருட்களை தவிர்க்க வேண்டும். க்ரீன் டீ குடிப்பது மிகவும் நல்லது.

ஆப்பிள், பிராக்கோலி ஆகியவற்றை உண்பதன் மூலம் உடலில் கொழுப்பு குறைக்க முடியும்.

பிட்ஸா, சிக்கன் ஃபிரை போன்ற உணவுகள் எடையை கூட்டி விடும். எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது.

மேற்கண்ட உணவுக் கட்டுப்பாடுகள் கடைபிடிப்பதை டயட் என்று  எண்ணாமல், ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றுகிறோம் என்று நினைத்து செயல்படுத்தினால், வெகுவிரைவில் உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியம் பெறலாம்.

லைப்ஸ்டைல்

Leave a comment

Comments