விருஷ்கா திருமண வரவேற்பில் மணமக்களை வாழ்த்திய மோடி

விருஷ்கா திருமண வரவேற்பில் மணமக்களை வாழ்த்திய மோடி

டெல்லி: விராட் கோலி-அனுஷ்கா ஷர்மா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரதமர் மோடி மணமக்களை வாழ்த்தினார்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியும், நடிகை அனுஷ்கா ஷர்மாவும் சுமார் 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில், இந்த நட்சத்திர ஜோடியின் திருமணம் எளிமையான முறையில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் கடந்த டிச.11ம் தேதி இத்தாலி நாட்டில் டஸ்கேனி எனும் இடத்தில் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்க தலைநகர் டெல்லியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இந்திய பிரதமருக்கு புதுமண தம்பதி நேரில் சென்று அழைப்பு விடுத்தனர்.

டெல்லியில் உள்ள தாஜ் ஹோட்டலில் நேற்று (டிச.21)மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மணமக்களை வாழ்த்தினார்.

டெல்லி திருமண வரவேற்பை தொடர்ந்து, கிரிக்கெட் உலக நண்பர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்க மும்பையில் வருகிற டிச.26ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மும்பை செல்லும் விராட்-அனுஷ்கா, வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு தென் ஆப்ரிக்கா செல்லவுள்ளனர்.

விராட்- அனுஷ்கா விருஷ்கா விராட் கோலி அனுஷ்கா ஷர்மா திருமண வரவேற்பு பிரதமர் மோடி Virat Kohli Anushka Virushka wedding Reception Delhi Reception PM Modi
சினிமா

Leave a comment

Comments