இலங்கை அணியுடன் இன்று 2வது டி20 போட்டி; தொடரை வெல்லுமா இந்தியா?

இலங்கை அணியுடன் இன்று 2வது டி20 போட்டி; தொடரை வெல்லுமா இந்தியா?

இந்தூர்: இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2வது டி20 கிரிக்கெட் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடைபெறுகிறது.


இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி இந்திய அணி அசத்தியுள்ளது. 


இதனை அடுத்து இந்தியா - இலங்கை அணிகள் மோதிய முதல் டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா 93 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் ஆட்டம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இந்த ஆட்டத்திலும் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

இப்போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரைக் கைப்பற்றும். இதனால் இப்போட்டி இலங்கை அணிக்கு வாழ்வா...சாவா? போட்டியாக அமைந்துள்ளது. வெற்றியை ருசிக்க இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் இப்போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி காத்துள்ளனர்.


இரு அணியிலும் 11 பேர் கொண்ட லெவனில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் வீரர்கள் வருமாறு:


இந்தியா: ரோகித்  ஷர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, தோனி, ஹர்த்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், பசலிதம்பி அல்து, ஜெய்தேவ் உனட்கட், பும்ரா, யுஸ்வேந்திர சஹல்.


இலங்கை: திசாரா பெரைரா (கேப்டன்), டிக்வெலா, உபுல்தரங்கா, குஷால் பெரைரா, மேத்யூஸ், சமரவிக்ரமா, குணரத்னே, தாசுன், ‌ஷனகா, அகிலா தனஞ்செயா, சமீரா, நுவன்பிரதிப்.

cricket india srilanka dhoni t20match indvasl indhore இலங்கை இந்தியா
விளையாட்டு

Leave a comment

Comments