ஸ்போர்ட் சிட்டி உருவாக்க வேண்டும்: ஃபேஸ்புக்கில் சச்சின் பேச்சு

ஸ்போர்ட் சிட்டி உருவாக்க வேண்டும்: ஃபேஸ்புக்கில் சச்சின் பேச்சு

டெல்லி: ஸ்மார்ட் சிட்டியை போன்று ஸ்போர்ட் சிட்டிக்களை உருவாக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், எம்.பி-யுமான சச்சின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை கூட்டத்தொடரில் நேற்று (டிச.21) சச்சின் டெண்டுல்கர், விளையாட்டுத்துறையின் எதிர்காலம் குறித்து பேச முற்பட்டார். அப்போது காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், சச்சினின் பேச்சு தடைப்பட்டது.

இதையடுத்து சமூக வலைத்தளங்களில் சச்சினுக்கு மாநிலங்களவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டது குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், மாநிலங்களவையில் தான் பேச தயார் செய்து வைத்திருந்த உரையை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ பதிவாக சச்சின் வெளியிட்டுள்ளார்.

சச்சின் தனது வீடியோவில், ஸ்மார்ட் சிட்டி உருவாக்குவதை போன்று ஸ்போர்ட் சிட்டிக்களை உருவாக்க வேண்டும். வலுவான, ஆரோக்கியமான பாரதத்தை உருவாக்குவதே எனது குறிக்கோள். விளையாட்டு மைதானங்களும், திடல்களும் நீடிக்க வேண்டும் என்றும், விளையாட்டை ஆராதிப்பதை விட, விளையாட வேண்டும் என்பதே எனது கனவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வடகிழக்கு இந்தியாவில் விளையாட்டின் மீதான ஆர்வம் அதிகமாக இருக்கிறது.  இந்தியாவில் வறுமை, சுகாதரம், உணவு பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் சச்சின் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டார்.  நாடாளுமன்றத்திற்கு சச்சின் வருவதேயில்லை என அவர் மீது புகார் கூறப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் முதன் முறையாக உரையாற்ற வந்த சச்சினுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

சச்சின் டெண்டுல்கர் மாநிலங்களவை நாடாளுமன்றம் ஃபேஸ்புக் பேச்சு விளையாட்டுத்துறை Sachin Tendulkar Sachin Sachin in Rajya Sabha Facebook post Sports City
விளையாட்டு

Leave a comment

Comments