பாகுபலி 2 படத்தை பின்னுக்கு தள்ளி சிறந்த இந்திய படமாக தேர்வான விக்ரம் வேதா !

பாகுபலி 2  படத்தை பின்னுக்கு தள்ளி சிறந்த இந்திய படமாக தேர்வான விக்ரம் வேதா !

டெல்லி: பிரபல சினிமா இணையதளமான ஐ.எம்.டி.பி (IMDb) வெளியிட்ட 2017-ஆம் ஆண்டின் சிறந்த 10 திரைப்படங்கள் பட்டியலில் தமிழ் படமான விக்ரம் வேதாமுதலிடத்தைப் பிடித்துள்ளது.
 
உலகின் அனைத்து திரைப்படங்களின் தகவல்களையும் ஐ.எம்.டி.பி’ (IMDb) இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். பிரபல இணைய தகவல் களஞ்சியமான விக்கிபீடியாவில் தெரிந்து கொள்ள முடியாத படங்களின் தகவல்களையும், இந்த ஐ.எம்.டி.பிதளத்தில் அறிந்து கொள்ள முடியும் என்பதே இதன் சிறப்பம்சம் ஆகும். உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான சினிமா ரசிகர்கள் இந்த தளத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
 
ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும் ஐ.எம்.டி.பிஇணையதளம், அந்த ஆண்டில் வெளியான சிறந்த திரைப்படங்களை பட்டியலிடுவது வழக்கம். அதுமட்டுமல்லாமல் இந்திய திரைப்படங்களையும் அவ்வாறு வரிசைப்படுத்தி வெளியிடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டில் வெளியான சிறந்த 10 இந்தியத் திரைப்படங்களை ஐ.எம்.டி.பிபட்டியலிட்டுள்ளது.
 
அதில், பாலிவுட் படங்களைக் காட்டிலும் தென்னிந்தியத் திரைப்படங்களே முன்னணியில் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக முதல் 3 இடங்களை தென்னிந்திய படங்களே பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதாமுதலிடம் பெற்று அசத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து 2வது இடத்தை பாகுபலி-2’ திரைப்படம் பெற்றுள்ளது. தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி’ 3-வது இடத்தை பிடித்துள்ளது.
 
ஐ.எம்.டி.பி வெளியிட்ட சிறந்த 10 திரைப்படங்களின் பட்டியல் இதோ:
 
1.விக்ரம் வேதா (தமிழ்)

2.பாகுபலி-2 (தெலுங்கு, தமிழ், இந்தி)

3.அர்ஜூன் ரெட்டி (தெலுங்கு)

4.சீக்ரெட் சூப்பர்ஸ்டார் (இந்தி)

5.ஹிந்தி மீடியம் (இந்தி)

6.தி காஸி அட்டாக் (தெலுங்கு)

7.டாய்லெட் ஏக் பிரேம் கதா (இந்தி)

8.ஜாலி எல்.எல்.பி 2 (இந்தி)

9.மெர்சல் (தமிழ்)

10.தி கிரேட் ஃபாதர் (மலையாளம்)

 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் மெர்சல்திரைப்படம் இந்தப் பட்டியலில் 9-வது இடத்தை பெற்றுள்ளது. ஐ.எம்.டி.பிதளத்தில் திரைப்படங்கள் பெற்ற ரேட்டிங்குகள் மற்றும்  அங்கீகரிக்கப்பட்ட பயனர்களின் வாக்குகளின் அடிப்படையில் இந்த டாப் 10 பட்டியலை ஐ.எம்.டி.பி தயாரித்துள்ளது.

baahubali 2 vikram vedha tamil movie india tamil cinema 2017 imdb bollywood விக்ரம் வேதா
சினிமா

Leave a comment

Comments