2ஜி தீர்ப்பு: சர்ச்சை ட்வீட்டை நீக்கிய சித்தார்த்

2ஜி தீர்ப்பு: சர்ச்சை ட்வீட்டை நீக்கிய சித்தார்த்

சென்னை: 2ஜி வழக்கின் தீர்ப்பு குறித்து சர்ச்சைக்குரிய ட்வீட்டை பதிவிட்ட சித்தார்த், தீர்ப்பி வெளியான பின்னர் தனது பதிவை நீக்கிவிட்டார்.

2ஜி முறைகேடு வழக்கில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகவிருந்த நிலையில், நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய ட்வீட்டை பதிவிட்டிருந்தார். அதில், ’ராஜா, கனிமொழி நடிப்பில் திருட்டுப்பயலே-1 படத்துக்கான விமர்சனம் இன்று வெளியாகிறது. ஜெ.ஜெ, சசி & கோ நடிப்பிலான திருட்டுப்பயலே-2 போல் உங்கள் படத்துக்கான தீர்ப்பும் நன்றாகவே இருக்கும் என நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துகள்’ என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டதாக தீர்ப்பு வெளியானதும் சித்தார்த் தனது ட்வீட்டை நீக்கிவிட்டு புதிய ட்வீடை பதிவிட்டார்.

அதில், ‘சூப்பர் ஹிட் என செய்தி வந்துள்ளது. அனைவரும் விடுதலை. என் இந்தியாவே சிறந்தது. இந்திய அரசியலின் தூய்மையான அப்பவிதனத்திற்கு எனது வாழ்த்துக்கள். இனி #2ஜி கிடையாது. தேசிய கீதத்திற்கு எழுந்து நில்லுங்கள்’ என்று மீண்டும் நக்கல்லாக ட்விட்டியுள்ளார்.

siddarth 2G case 2G verdict Raja Kanimozhi DMK சித்தார்த் 2ஜி வழக்கு 2ஜி தீர்ப்பு ராஜா கனிமொழி திமுக
சினிமா

Leave a comment

Comments