குஜராத் முதல்வராக விஜய் ரூபானி மீண்டும் தேர்வு.. துணை முதல்வரானார் நிதின் பட்டேல்

குஜராத் முதல்வராக விஜய் ரூபானி மீண்டும் தேர்வு.. துணை முதல்வரானார் நிதின் பட்டேல்

அகமதாபாத்: குஜராத் மாநில முதல்வராக விஜய் ரூபானி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  அதேபோன்று துணை முதல்வர் பதவிக்கு நிதின் படேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

குஜராத் மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் பாஜக 99 இடங்களில் வென்று 6 வது முறையாக ஆட்சியை தக்கவைத்துள்ளது. பாஜக வெற்றி பெற்றாலும் முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கிடையே மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி முதல்வராக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்தது.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் காந்திநகரில் இன்று நடந்தது. அப்போது முதல்வராக யாரை தேர்ந்தெடுப்பது என பாஜக எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார் அருண்ஜெட்லி. ஆலோசனையின் முடிவில் முதல்வராக விஜய் ரூபானியையும், துணை முதல்வராக நிதின் படேலையும் மீண்டும் தேர்வு செய்துள்ளதாக அருண்ஜெட்லி அறிவித்தார்.
vijay rupani gujrat cm bjp deputy cm விஜய் ரூபானி குஜராத் முதல்வர் பாஜக
இந்தியா

Leave a comment

Comments