புதிய 2000 ரூபாய் நோட்டை திரும்பப்பெறும் எண்ணம் ஏதும் இல்லை: அருண் ஜெட்லி திட்டவட்டம்

புதிய 2000 ரூபாய் நோட்டை திரும்பப்பெறும் எண்ணம் ஏதும் இல்லை: அருண் ஜெட்லி திட்டவட்டம்

அகமதாபாத்: புழக்கத்தில் உள்ள புதிய 2000 ரூபாய் நோட்டை திரும்பப்பெற இருப்பதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை என்றும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பழைய ரூபாய் நோட்டுக்கு மாற்றாக புதிய  500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. உயர் மதிப்பு கொண்ட 2000 ரூபாய் நோட்டு அதிகமாக புழக்கத்தில் இருப்பதால், அது திரும்பப் பெறப்படலாம் அல்லது அச்சடிப்பது நிறுத்தப்படலாம் என்று சில நாட்களுக்கு முன்னர் ஸ்டேட்  வங்கி ஆய்வறிக்கையில் கூறப்பட்டது.

இந்நிலையில் புதிய ரூ.2,000 நோட்டை திரும்பப்பெறும் எண்ணம் ஏதும் இல்லை எனவும், அதை யாரும் நம்ப வேண்டாம் எனவும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
arun jaitley rumor Finance Minister அருண் ஜெட்லி வதந்தி
இந்தியா

Leave a comment

Comments