‘பென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்-2’ படத்தில் ஜானி டெப் உடன் இணைந்த முன்னாள் மனைவி

‘பென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்-2’ படத்தில் ஜானி டெப் உடன் இணைந்த  முன்னாள் மனைவி

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் உடன் அவரது முன்னாள் மனைவி ஆம்பர் ஹியர்ட் பென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்-2’ படத்தில் இணைந்து நடிக்க உள்ளார்.

ஹாரிபாட்டர் கதைகள் எழுதி புகழ்பெற்ற ஜே.கே.ரௌலிங் என்ற பெண் எழுத்தாளர், 2001-ஆம் ஆண்டு அதேபோன்ற கதைக்களம் கொண்ட ஒரு கதை எழுதினார். அதற்கு பென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்என பெயரிட்டார். அந்தக் கதைக்கு ஜே.கே.ரௌலிங் திரைக்கதை எழுத, கடந்த ஆண்டு பென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் அண்ட் வேர் டு ஃபைன்ட் தெம்என்ற திரைப்படம் வெளியானது. அதன் இரண்டாம் பாகம் ஹாலிவுட்டில் தற்போது பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டு வருகிறது.

பென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்படத்தின் முதல் பாகத்திலேயே, பிரபல ஹாலிவுட் நடிகரான ஜானி டெப் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து 2-வது பாகத்திலும் நடித்து வருகிறார். தற்போது, இப்படத்தின் நடிகர்கள் குழுவில் ஹாலிவுட் நடிகை ஆம்பர் ஹியர்ட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆவார். இந்த ஆண்டு நவம்பர் மாதம் தான் இருவரும் விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சினிமா

Leave a comment

Comments