கூகுள் சர்ச் ட்ரென்ட்சில் முதலிடம் பிடித்த பாகுபலி-2

கூகுள் சர்ச் ட்ரென்ட்சில் முதலிடம் பிடித்த பாகுபலி-2

டெல்லி: கூகுள் வலைதளத்தில் 2017ம் ஆண்டு இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள் பட்டியலில் பாகுபலி-2’ முதலிடம் பிடித்துள்ளது.
 
ஒவ்வொரு ஆண்டும் கூகுளில் அதிகம் தேடப்படும் வார்த்தைகளின் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. உலகஅளவில் அதிகம் தேடிய வார்த்தைகள் மற்றும் நாடு வாரியாக அதிகம் தேடிய வார்த்தைகளை கூகுள் நிறுவனம் வகைப்படுத்தி வெளியிட்டுள்ளது. 2017ம் ஆண்டு இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட
  வார்த்தையாக பாகுபலி-2’ முதலிடம் பெற்றுள்ளது. பொழுதுபோக்கு பிரிவில் சன்னி லியோன்என்ற வார்த்தை முதலிடத்தில் உள்ளது.
 
பாடல்கள் பிரிவில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக முபாரகான்படத்தின் ஹவா ஹவா பாடல் முதலிடத்தில் உள்ளது. இது தவிர ஆதாருடன் பான் கார்டை இணைப்பது, ஜிஎஸ்டி என்றால் என்ன ஆகிய வாசகங்களையும் இந்தியர்கள் அதிகம் தேடியுள்ளனர். விளையாட்டு பிரிவில் இந்தியன் பிரீமியர் லீக்என்ற வார்த்தை இந்தியர்களால் அதிகம் தேடப்பட்டுள்ளது.

சினிமா

Leave a comment

Comments