செய்திகள்

மகாராஷ்டிராவில் மினி பஸ் ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 13 பேர் பலி மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் மினி பஸ் ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரியில் இருந்து கோலாப்பூருக்கு மினி பஸ் ஒன்று 16 பயணிகளுடன் நேற்றிரவு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தானது கோலாப்பூர் அருகே வந்து கொண்டிருந்த போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பஞ்சகங்கா ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி பேருந்தில் பயணம் செய்த 13 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.