ஆட்டம் ஆரம்பம்! வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா!!
வேளச்சேரி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவரே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் வேட்பாளர் அறிவிப்பு, வேட்பு மனுதாக்கல், பிரச்சாரம் என்று தங்களது தேர்தல் பணிகளில் முழுவிச்சில் இறங்கியுள்ளனர். இதன்படி மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக வேளச்சேரி தொகுதியில் விருப்ப ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்து, பரப்புரையை மேற்கொண்டார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை வேளச்சேரி வாக்காளர்களுக்கு தெரிவிக்க கடமை பட்டுள்ளேன். நான் உங்கள் அனைவரையும் சந்தித்து உங்கள் ஆசீர்வாதங்களையும் வாக்குகளையும் பெற விரும்புகிறேன்.
நாங்கள் டிஜிட்டல் பிரசாரத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம். எங்களது கட்சி உறுப்பினர்கள் உங்களை சந்திப்பார்கள். எனக்கும், மக்கள் நீதி மய்யத்திற்கும் வாக்களியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.