பிரபல ஹாலிவுட் நடிகர் திடீர் மரணம்

 
Mitchell Ryan

ஹாலிவுட் நடிகர் மிட்செல் ரியான் காலமானார். அவருக்கு வயது 88.

mitchell ryan

பிரபல ஹாலிவுட் நடிகர் மிட்செல் ரியான். இவர் ஏராளமான ஹாலிவுட் திரைப்படங்கள், டிவி சீரியகளில் நடித்துள்ளார். இவர் நடித்த டார்க் ஷேடோஸ், தர்மா அண்ட் கிரேக் உள்பட பல தொடர்கள் வரவேற்பைப் பெற்றது. 

மெல் கிப்சனின் லெதல் வெப்பன் படத்தில் வில்லத்தனம் கொண்ட ஜெனரலாக இவர் நடித்திருந்தார். மற்றும் லையர் லையர், மேக்னம் ஃபோர்ஸ் உட்பட பல படங்களில் இவர் நடிப்பு பேசப்பட்டது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்த இவர், இதய நோய் காரணமாக நேற்று மரணமடைந்தார். அவர் மறைவை அடுத்து அவருடன் நடித்தவர்கள் தங்கள் நினைவுகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

டார்க் ஷேடோஸ் தொடரில் ரியானுடன் நடித்த நடிகை கேத்ரின் லெய் ஸ்காட் கூறும்போது, ‘நண்பர் ரியான் காலமான செய்தி கேள்விப்பட்டு மனம் உடைந்தேன். அவர் என் வாழ்க்கையில் பெரிய பரிசாக இருந்தார். அவருடனான இனிமையான நினைவுகளை நான் நேசிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.