பழம்பெரும் நடிகர் ஶ்ரீகாந்த் காலமானார்!

 
actor Srikanth passed away

வெண்ணிற ஆடை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் இன்று வயது முதிர்வால் காலமானார். இவருக்கு வயது 82. 

1965 ஆம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ படத்தில் அறிமுகமான நடிகர் ஸ்ரீகாந்த், தங்கப் பதக்கம் படத்தில் சிவாஜி கணேசனுக்கு மகன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தார். பைரவி படத்திலும் இவருடைய நடிப்பு பேசும் விதமாக அமைந்தது. நாகேஷ், வாலி ஆகியோர் திரையுலகில் ஒளிர துணையாக நின்றவர், ஜெயலலிதாவின் முதல் கதாநாயகனும், ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பராகவும் இருந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். அதுமட்டுமின்றி இவர், மிகச் சிறந்த ஆங்கில, தமிழ் இலக்கிய வாசகர். நாடக மேடையிலும், வெள்ளித் திரையிலும் மிளிர்ந்த நடிகர் ஸ்ரீகாந்த், சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமன், ரஜினி உள்ளிட்டவர்களுடன் இணைந்தும் நடித்துள்ளார். இவருடைய மறைவுக்கு ஏராளமான திரை கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.