ஒற்றை ஜடை போட்டு வந்ததால் மாணவிக்கு நேர்ந்த கதி! அறைக்குள் அடைக்க வைத்து தலைமை ஆசிரியர் செய்த கொடூரம்

 
h

இரட்டை ஜடை போடாமல் ஒற்றை ஜடை போட்டு வந்ததால் அந்த பள்ளி மாணவியை  அறையில் பூட்டி வைத்து தலைமை ஆசிரியரே தலை முடியை கண்டபடி வெட்டி கண்டபடி திட்டி அனுப்பி இருக்கிறார்.   அவர் இதேபோன்று பல மாணவிகளுக்கும் செய்து வந்திருக்கிறார்.  தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் இந்த மாணவி போலீசுக்கு சென்று புகார் அளித்ததோடு ,   தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்ததால் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  இதை அறிந்த தலைமை ஆசிரியர் தலைமறைவாக இருக்கிறார்.

 உத்தரப்பிரதேச மாநிலத்தில் பருகாபாத் என்கிற பகுதியை அடுத்த நவாப் கனஞ்ச் என்கிற இடத்தில் இயங்கி வரும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சுமித் யாதவ்.   இவர் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் ஒற்றை ஜடையுடன் வந்ததால் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறார்.  ஒற்றை ஜடையுடன் வந்த மாணவியை  பார்த்ததும் ஆத்திரப்பட்ட சுமித்,  இரட்டை ஜடை போடாமல் ஏன் ஒற்றை ஜடை போட்டு வந்தாய் என்று கடுமையாக பேசியிருக்கிறார்.

g

 பின்னர் அந்த மாணவியை இழுத்துக் கொண்டு போய் ஓர் அறையில் அடைத்திருக்கிறார்.  அங்கே அந்த தலைமை ஆசிரியரே அந்த மாணவிக்கு தலை முடியை வெட்டி இருக்கிறார்.   அலங்கோலமாக வெட்டிவிட்டு வெளியே அனுப்பிய தலைமை ஆசிரியர்,  தகாத வார்த்தைகளால் திட்டி  இருக்கிறார்.   இதில் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி வீட்டிற்கு வந்து பெற்ரோருடன் சொல்லி அழுது இருக்கிறார்.

 ஏற்கனவே இதே போன்று பல மாணவிகளுக்கு இப்படி செய்திருக்கிறார் அந்த தலைமை ஆசிரியர் என்ற தகவலும் பெற்றோரை அதிர வைத்திருக்கிறது.  இதை இப்படியே விடக்கூடாது என்று அந்த மாணவி போலீசில் புகார் அளிக்க சென்றிருக்கிறார்.

 இதற்கிடையில் அனைத்து மாணவிகளையும் ஒன்று திரட்டி,  இனி இரட்டை ஜடை போட்டுக் கொண்டுதான் வரவேண்டும்.  யாராவது ஒற்றை ஜடை போட்டுக் கொண்டு வந்தால் இதே நிலைமைதான் ஏற்படும் என்று கண்டபடி திட்டி இருக்கிறார் தலைமை ஆசிரியர்  சுமித் யாதவ்.  

 தலை முடியை வெட்டியதோடு அல்லாமல் தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டார் தலைமை ஆசிரியர் .  அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளுவேன் என்று மாணவி போலீசில் மிரட்டி இருக்கிறார் .  இதை அடுத்து போலீசார் தலைமை ஆசிரியர் சுமித் யாதவ் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  இதை அறிந்த தலைமை ஆசிரியர் தலைமறைவாகிவிட்டார்.  போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.